- Blind mode tutorial
lichess.org
நன்கொடையளி

சுவிசு பந்தயங்கள்

தற்பொழுது விளையாடப்படுகிறது
Blitz Incrementமூலம் Lichess Swiss9/10 சுற்றுகள்5+2 • மின்னல் • மதிப்பிட்டது
56
Classicalமூலம் Lichess Swiss3/5 சுற்றுகள்30+0 • செவ்வியல் • மதிப்பிட்டது
50
SuperBlitz Incrementமூலம் Lichess Swiss7/12 சுற்றுகள்3+1 • மின்னல் • மதிப்பிட்டது
41
Rapidமூலம் Lichess Swiss2/7 சுற்றுகள்10+0 • துரிதம் • மதிப்பிட்டது
41
7chess 9 pmமூலம் المسابقة اليومية ادكو5/7 சுற்றுகள்7+2 • துரிதம் • மதிப்பிட்டது
27
விரைவில் துவங்கும்
Classical Incrementமூலம் Lichess Swiss5 சுற்றுகள்25+3 • செவ்வியல் • மதிப்பிட்டது
6
Superblitzமூலம் Клуб Академия шахмат7 சுற்றுகள்3+0 • மின்னல் • மதிப்பிட்டது
6
100 member celebrationமூலம் whale team7 சுற்றுகள்3+0 • மின்னல் • மதிப்பிட்டது
2
مميزين والعودة ٣மூலம் فريق.... ك.نادر باشا7 சுற்றுகள்10+3 • துரிதம் • மதிப்பிட்டது
3
NIGERIA OPENமூலம் NIGERIA ELITE9 சுற்றுகள்3+0 • மின்னல் • மதிப்பிட்டது
2

(wiki) சுவிசு பந்தயத்தில், ஒவ்வொரு போட்டியாளரும் மற்ற அனைத்து பங்கேற்பாளருடன் விளையாட தேவையற்றது. போட்டியாளர்கள் ஒவ்வொரு சுற்றிலும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள், மேலும் ஒவ்வொரு போட்டியாளரும் நிகரான மதிப்பெண்களுடன் எதிராளிகளை விளையாடுவதை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்ட விதிகளின் தொகுப்பைப் பயன்படுத்தி இணையாக இணைக்கப்படுகிறார்கள், ஆனால் ஒரே எதிரியை ஒன்றுக்கு மேற்பட்ட முறை அல்ல. வெற்றியாளர் அனைத்து சுற்றுகளிலும் பெறப்பட்ட அதிக புள்ளிகளுடன் கூடிய போட்டியாளர் ஆவார். ஒற்றைப்படை எண்ணிக்கையிலான வீரர்கள் இல்லாவிட்டால் அனைத்து போட்டியாளர்களும் ஒவ்வொரு சுற்றிலும் விளையாடுவார்கள்.

சுவிசு பந்தயம் கூட்டணித் தலைவர்களால் மட்டுமே படைக்க முடியும், மேலும் கூட்டணி உறுப்பினர்களால் மட்டுமே விளையாட முடியும்.
சுவிசு பந்தயங்களில் விளையாடத் துவங்க ஒரு கூட்டணியில் சேர அல்லது படைக்க.

ஒப்பீடுஆடுகளப் பந்தயங்கள்சுவிசு பந்தயங்கள்
பந்தயத்தின் காலநீட்சிமுன் வரையறுக்கப்பட்ட காலநீட்சி மணித்துளிகளில்முன் வரையறுக்கப்பட்ட அதிகபட்ச சுற்றுகள், ஆனால் கால அளவு தெரியவில்லை
விளையாட்டுகளின் எண்ணிக்கைஒதுக்கப்பட்ட காலத்தில் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு விளையாடலாம்முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டது அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியாக
இணைத்தல் அமைப்புநிகரான தரவரிசையில் கிடைக்கக்கூடிய எதிராளர் எவரேனும்புள்ளிகள் மற்றும் சமன்நிலை முறிவு அடிப்படையில் சிறந்த இணைத்தல்
இணைத்தல் நேரம் காத்திருப்புவேகமாக: எல்லா வீரர்களுக்கும் காத்திருக்காதுமெதுவாக: அனைத்து வீரர்களுக்கும் காத்திருக்கிறது
முற்றொரும இணைத்தல்சாத்தியம், ஆனால் தொடர்ச்சியாக அல்லதடை செய்யப்பட்டுள்ளது
தாமதமாகச் சேர்தல்ஆம்ஆம் பாதிக்கு மேல் சுற்றுகள் தொடங்கும் வரை
இடைத்தயக்கம்ஆம்ஆம் ஆனால் சுற்றுகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்
தொடர் மற்றும் வெறித்தனம்ஆம்இல்லை
OTB பந்தயங்களைப் போன்றதுஇல்லைஆம்
வரம்பற்ற மற்றும் சுதந்திரமானஆம்ஆம்
?

களங்களுக்கு மாற்றாக சுவிசு பந்தயங்களை எப்போது பயன்படுத்த வேண்டும்?சுவிசு பந்தயத்தில், அனைத்து பங்கேற்பாளர்களும் ஒரே எண்ணிக்கையிலான ஆட்டங்களை விளையாடுகிறார்கள், மேலும் ஒருவருக்கொருவர் ஒருமுறை மட்டுமே விளையாட முடியும்.
கழகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பந்தயங்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

?

புள்ளிகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?ஒரு வெற்றி ஒரு புள்ளி மதிப்புடையது, ஒரு இழுபறி அரை புள்ளி, மற்றும் தோல்வி சுழிப் புள்ளிகள்.
ஒரு சுற்றின்போது ஒரு வீரரை இணைக்க முடியாதபோது, அவர்கள் ஒரு புள்ளி மதிப்புடன் மறையூக்கம் பெறுவர்.

?

சமநிலை முறிவு எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?சோனெபோன்-பெர்கர் மதிப்பெண் உடன்.
வீரர் வீழ்த்தும் ஒவ்வொரு எதிராளியின் மதிப்பெண்ணையும் மற்றும் இழுபறி செய்த ஒவ்வொரு எதிராளியின் மதிப்பெண்ணில் பாதியையும் சேர்க்கவும்.

?

எவ்வாறு இணைத்தல் செயல்படுகிறது?டச்சு அமைப்பு உடன், பிடே கையேடுக்கு இணங்க, bbPairings ஆல் செயல்படுத்தப்பட்டது.

?

பந்தயத்தில் வீரர்களைவிட அதிக சுற்றுகள் இருந்தால் என்ன நடக்கும்?சாத்தியமான அனைத்து இணைகளும் விளையாடியதும், பந்தயம் முடிவடைந்து வெற்றியாளர் அறிவிக்கப்படும்.

?

இது ஏன் கூட்டணிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது?சுவிசு பந்தயங்கள் நிகல்நிலை சதுரங்கத்திற்காக வடிவமைக்கப்படவில்லை. அவர்கள் வீரர்களிடமிருந்து நேரம் தவறாமை, ஆழ்ந்த ஈடுபாடு மற்றும் பொறுமையைக் கோருகின்றனர்.
இந்த நிபந்தனைகள் உலகளாவிய பந்தயங்களைவிட ஒரு கூட்டணிக்குள் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று நாங்கள் கருதுகிறோம்.

?

ஒரு வீரர் எத்தனை மறையூக்கம் பெற முடியும்?ஒவ்வொரு முறையும் இணைத்தல் அமைப்பால் அவருக்கான இணையைக் கண்டுபிடிக்க முடியாத ஒவ்வொரு முறையும் அவ்வீரர் மறையூக்கத்துடன் கூடிய ஒரு புள்ளி பெறுவார்.
கூடுதலாக, ஒரு ஆட்டக்காரர் ஒரு போட்டியில் தாமதமாகச் சேரும்போது அரைப் புள்ளியுடன் ஒரு மறையூக்கம் பெறுவார்.

?

ஆரம்பகட்ட இழுபறியினால் என்ன நடக்கும்?சுவிசு விளையாட்டுகளில், வீரர்கள் 30 நகர்வுகள் விளையாடுவதற்கு முன்பு இழுபறி செய்துகொள்ள முடியாது. இந்த நடவடிக்கையால் முன் ஏற்பாடு செய்யப்பட்ட இழுபறிகளைத் தடுக்க முடியாது என்றாலும், குறைந்தபட்சம் வெளியேறும்போது ஒரு இழுபறி ஒப்பந்தத்தை இது கடினமாக்குகிறது.

?

ஒரு வீரர் விளையாட்டை விளையாடவில்லை என்றால் என்ன நடக்கும்?அவர்களின் கடிகாரம் துடிக்கும், அவர்கள் காலக்கெடு முடிவடையும் மற்றும் ஆட்டத்தில் தோல்வியடைவர்.
பின்னர் அமைப்பால் அவ்வீரர் பந்தயத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள், அதனால் அவர்கள் அதிக ஆட்டங்களில் தோல்வியடையமாட்டார்கள்.
அவர்கள் எந்நேரத்திலும் போட்டியில் மீண்டும் சேரலாம்.

?

காட்சியளிக்காதது தொடர்பாக என்ன செய்யப்படுகிறது?சுவிசு நிகழ்வுகளுக்கு பதிவு செய்யும் வீரர்கள் ஆனால் தங்கள் ஆட்டங்களை விளையாடாதவர்கள் சிக்கலாக இருக்கலாம்.
இந்தச் சிக்கலைத் தணிக்க, ஒரு ஆட்டத்தை விளையாடத் தவறிய வீரர்களை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு புதிய சுவிசு நிகழ்வில் சேர்வதை லிசெஸ் தடுக்கும்.
இருப்பினும் சுவிசு நிகழ்வை படைப்பவர் அவர்களை நிகழ்வில் சேர அனுமதிப்பதை முடிவெடுக்கலாம்.

?

வீரர்கள் தாமதமாகச் சேர முடியுமா?ஆம், பாதிக்கும் மேற்பட்ட சுற்றுகள் துவங்கும் வரை; எடுத்துக்காட்டாக, 11-சுற்றுகள் உள்ள சுவிசில், வீரர்கள் 6-ஆம் சுற்று துவங்குவதற்கு முன்பு, 7-வது சுற்று துவங்குவதற்கு முன்பு 12-சுற்றுகளிலும் சேரலாம்.
தாமதமாகச் சேருபவர்கள் பல சுற்றுகளைத் தவறவிட்டாலும், ஒரு மறையுக்கம் பெறுவர்.

?

சுவிசு, களப் பந்தயங்களை மாற்றியமைக்குமா?இல்லை. அவை நிரப்பு அம்சங்கள்.

?

தொடர் சுழல்முறை பற்றி என்ன?நாங்கள் அதைச் சேர்க்க விரும்புகிறோம், ஆனால் அருங்கேடாக தொடர் சுழல்முறை நிகல்நிலையில் செயல்படவில்லை.
காரணம், பந்தயத்திலிருந்து முன்கூட்டியே வெளியேறும் நபர்களைக் கையாள்வதில் நியாயமான வழி இல்லை. நிகல்நிலை நிகழ்வில் அனைத்து வீரர்களும் தங்கள் அனைத்து ஆட்டங்களையும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இது நடக்காது, இதன் விளைவாக பெரும்பாலான தொடர் சுழல்முறை பந்தயங்கள் குறைபாடுள்ளதாகவும் நியாயமற்றதாகவும் இருக்கும், இது இருப்பதற்கான முதற்காரணத்தையே தோற்கடிக்கிறது.
நீங்கள் நிகல்நிலையில் தொடர் சுழல்முறைக்கு நெருங்கிய வடிவில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுகளுடன் கூடிய சுவிசு பந்தயம் விளையாடலாம். மற்றும் பந்தயம் முடிவதற்குள் சாத்தியமான அனைத்து இணைகளும் விளையாடப்படும்.

?

மற்ற பந்தய அமைப்புகளைப் பற்றி என்ன?தற்சமயம் லிசெஸ் ற்கு அதிகமான பந்தய அமைப்புகளைச் சேர்க்க நாங்கள் திட்டமிடவில்லை.